நாளை 'பிளை ஆப்' மேட்ச் : ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மோதல்

By 
Tomorrow's 'Fly Off' Match Ruby Trichy Warriors - Sepak Super Gillies clash

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது.

கொரோனா பரவல் அச்சுறுத்தலால், அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின.

பிளே ஆப் தகுதி :

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன.

நாளைய ஆட்டம் :

ரூபி திருச்சி வாரியர்ஸ் 10 புள்ளியுடன் முதல் இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 புள்ளியுடன் 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 8 புள்ளியுடன் 3-வது இடத்தையும், லைகா கோவை கிங்ஸ் 7 புள்ளியுடன் 4-வது இடத்தையும் பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

‘பிளேஆப்’ சுற்று ஆட்டம் நாளை (10-ம் தேதி) தொடங்குகிறது. சென்னையில், நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில், முதல் இடத்தை பிடித்த ரூபி திருச்சி வாரியர்ஸ்- இரண்டாம் இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் மோதும்.

தேதி விவரம் :

வெளியேற்றுதல் சுற்று நாளை மறுதினம் (11-ம் தேதி) நடைபெறுகிறது.  இதில் 3-ம் இடம் பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், 4-ம் இடம் பிடித்த லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதில், வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1 சுற்றில் தோற்ற அணியுடன் மோதும். இது குவாலிபையர் 2 சுற்று ஆகும்.

13-ம் தேதி நடைபெற உள்ள குவாலிபையர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி ஆகஸ்டு 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில், குவாலிபையர் 1-ல் வென்ற அணியும், குவாலிபையர் 2-ல் வென்ற அணியும் மோத உள்ளன.

Share this story