தினேஷ் கார்த்திக்குக்கு, டோனி பாராட்டு...

msd4

இந்திய கிரிக்கெட் அணியின் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக், அவ்வப்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் அசத்துகிறார்.

இந்த நிலையில் அவரது கிரிக்கெட் வர்ணனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி பாராட்டியுள்ளார். இது குறித்து கூறிய தினேஷ் கார்த்திக் : எனது வர்ணனைக்கான மகத்தான பாராட்டு டோனியிடம் இருந்து கிடைத்தது, நான் அதை எதிர்பார்க்கவில்லை. 

டோனி என்னை அழைத்து, 'நான் உங்களது வர்ணனையை மிகவும் ரசித்தேன், நன்றாக இருந்தது, நன்று என்று பாராட்டினார். அதற்கு மிக்க நன்றி என்று பதிலளித்ததாக கூறினார்.
 

Share this story