வருகிற 24-ந்தேதி ஆட்டம் : இந்திய ஹாக்கி அணிக்கு, தமிழக வீரர் தேர்வு

Upcoming 24-day match Tamil Nadu player selected for the Indian hockey team

12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில், வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது.

இதில், நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. 

இந்த போட்டிக்கான 24 பேர் கொண்ட இந்திய அணிக்கு, தமிழக வீரரான மாரீஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதையொட்டி, கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன், தூத்துக்குடி எம்.பி.கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

அப்போது, தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன், இந்திய அணியின் முன்னாள் வீரர் திருமால்வளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Share this story