டோனியின் பைக் ஷோரூமை பார்த்து, மெர்சல் ஆன வெங்கடேஷ் பிரசாத் கமெண்ட்..

By 
bige

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக எம்.எஸ்.டோனி, டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை பெற்று கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதேபோன்று ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5-வது முறையாக கோப்பையை வாங்கி கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்ட டோனி, அதே அளவுக்கு இரு சக்கர வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டவர். இது குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசியுள்ள டோனி, உலகின் முன்னணி பைக்குகள் வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார்.

இந்த நிலையில் டோனியின் வீட்டுக்கு சென்றுள்ள பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத், டோனியின் வீட்டில் உள்ள பைக்குகளை பார்த்து வியந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், ராஞ்சியிலுள்ள டோனியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, டோனி வைத்திருக்கும் பைக்குகளை ஒட்டுமொத்தமாக  வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிட்டத்தட்ட 50-க்கும் அதிகமான பைக்குகள், 10-க்கும் மேற்பட்ட கார்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதைப் பார்த்த வெங்கடேஷ் பிரசாத் மட்டுமின்றி அவரது நண்பர்களும் வியந்து பார்த்துள்ளனர். அந்த வீடியோவில், பைக்குகளை நிறுத்துவதற்கான ஷெட் அமைப்பதற்கு வீட்டில் குடும்பத்தினர் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆதலால், தான் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் பைக் மற்றும் கார்களை நிறுத்துவதற்கு ஷெட் அமைத்தோம். இந்த ஷெட் அருகில் தான் பேட்மிண்டன் கோர்ட்டும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். 

Share this story