விராட்கோலி திருமணம் செய்திருக்கக் கூடாது : சோயிப் அக்தர் ஆதங்கம்

By 
Virat Kohli should not have been married Shoaib Akhtar Adangam

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து, அவரைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன. 

விராட் கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையேயுள்ள கருத்து வேறுபாடுதான், இந்த பிரச்சனைக்கு காரணம் என்று கருதப்படுகிறது. 

சதம் :

அதேசமயம், விராட் கோலி 2 வருடங்களாக சதம் அடிக்காததும், சொற்ப ரன்களில் அவுட் ஆனதும்கூட, அவர் பதவி விலகியதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், விராட் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது :

விராட் கோலி கேப்டன் பதவியை விட்டு அவராக வெளியேறவில்லை.  ஆனால், அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அவர், இரும்பினால் செய்யப்பட்டவர் அல்ல. அவரும் சாதாரண மனிதர் தான். 

அதிக சாதனை :

விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், மற்றும் உலகில் வேறு எவரையும் விட அதிகமாக சாதித்துள்ளார். 

அவர் இந்த குழப்பங்களில் இருந்து வெளியே வருவார் என்று நினைக்கிறேன். இதிலிருந்து அவர் முன்னோக்கிச் செல்ல வேண்டும். யார் மீதும் எந்தக் கசப்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது. அனைவரையும் மன்னித்துவிட்டு நகர்ந்துகொண்டே இருங்கள்.

விராட் கோலி சதம் அடித்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் மேல் உள்ள அழுத்தமே, அவரது ஆற்றல் குறைவதற்கு காரணம். 

அவர், 120 சதங்கள் அடித்த பின்னர் தான் திருமணம் செய்திருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.

நான் அவர் இடத்தில் இருந்திருந்தால், திருமணம் செய்திருக்க மாட்டேன். அவரது முடிவை நாம் குறை சொல்ல முடியாது. திருமணம் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம்' என்றார்.
*

Share this story