சிக்ஸர் மழை பொழிந்த வார்னர்; பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 4 முறை சதம்..

பெங்களுரூ சின்னச்சாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 18ஆவது கிரிக்கெட் லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதன்படி டேவிட் வார்னர் மற்று மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கி நிதானமாக தொடங்கி பின்னர் அதிரடியாக விளையாடினர். இருவரும் மாறி மாறி அரைசதம் அடித்து அதன் பிறகு சதமும் விளாசினர்.
இந்த நிலையில் தான் டேவிட் வார்னர் 85 பந்துகளில் சதம் விளாசி தொடர்ந்து 4 முறை பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக டேவிட் வார்னர் (2017 – 2023 வரையில்)
130(119), சிட்னி, 2017
179(128), அடிலெய்டு, 2017
107(111), டாண்டன், கிரிக்கெட் உலகக் கோப்பை 2019
100*(85), பெங்களுரு, 2023 – 124 பந்துகளில் 163 ரன்கள் (14 பவுண்டரி, 9 சிக்ஸர்)
இதற்கு முன்னதாக இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி தொடர்ந்து 4 முறை சதம் (2017 -18) விளாசியிருந்தார்.
மேலும், உலகக் கோப்பையில் அதிக முறை சதம் விளாசியவர்களின் பட்டியலிலும் இணைந்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியதன் மூலமாக உலகக் கோப்பையில் 5ஆவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக உலகக் கோப்பையில் சதம் விளாசியவர்கள்:
ரோகித் சர்மா – 7
சச்சின் டெண்டுல்கர் – 6
ரிக்கி பாண்டிங் – 5
குமார் சங்கக்காரா – 5
டேவிட் வார்னர் – 5
இன்றைய போட்டியில் தொடக்க வீரர்கள் இருவரும் சதம் விளாசியதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க வீரர்கள் சதம் விளாசியவர்கள் பட்டியலில் வார்னர் மற்றும் மார்ஷ் இணைந்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து தொடக்க வீரர்களாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தில்ஷன் மற்றும் தரங்கா இருவரும் 282 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.