யார் சரியாக இருப்பார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறோம் : ரோகித் சர்மா உறுதி 

By 
rohit111

ராஜ்கோட்டில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி யில் இந்தியா தோல்வி அடைந்தது. முதல் 2 ஆட்டங்களில் வென்றதால் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இப்போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

நான் பார்முக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளில் நாங்கள் நன்றாக விளையாடினோம்.

வெவ்வேறு சமயங்களில் சவாலுக்கு ஆளானோம். அந்த சவாலை ஏற்றுக் கொண்டு விளையாடினோம். துரதிஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தை அதிகம் பார்க்க போவதில்லை. உலக கோப்பைக்காக 15 பேர் கொண்ட அணியை பற்றி பேசும்போது, எங்களுக்கு என்ன தேவை, யார் சரியாக இருப்பார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

நாங்கள் குழப்பமடையவில்லை. நாங்கள் எதை நோக்கி செல்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்" என்றார்.


 

Share this story