எங்களின் திறமைக்கு ஏற்ப பேட்டிங் செய்யவில்லை : கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டி

By 
har3

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 2வது போட்டிநடந்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.

36.4 ஒவர்களில் 4 விக்கெட் இழந்து 182 ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாய் ஹோப் 63 (80 பந்து,) கார்டி 48 (65 பந்து) ரன்னில் களத்தில் இருந்தனர். இந்திய பவுலிங்கில் ஷர்துல் தாகூர் 3, குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1-1 என வெஸ்ட்இண்டீஸ் சமன் செய்த நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி நாளை மறுநாள் தாரூபா ஸ்டேடியத்தில் நடைபெற பெற உள்ளது.

தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:

எங்களின் திறமைக்கு ஏற்ப பேட்டிங் செய்யவில்லை. முதல் போட்டியை விட பிட்ச் பேட்டிங்கிற்கு சிறப்பாக இருந்தது. கில்லை தவிர மற்ற அனைவரும் பீல்டர்களை நோக்கி அடித்து அவுட் ஆனது ஏமாற்றம். ஆனால் இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தொடக்க வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர்.

குறிப்பாக இஷான் நன்றாக ஆடினார். தாகூர் பந்துவீச்சில் எங்களை மீட்டெடுத்தார். ஹோப் மற்றும் கார்டி சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றனர். உலகக் கோப்பைக்கு தயாராக நான் அதிக ஓவர்கள் வீச வேண்டும். ஆனால் நான் முயலை போல் வேகமாக தயாராகாமல், ஆமையை போல் மிதமான வேகத்தில் உலகக்கோப்பைக்கு தயாராகிறேன் என்று நினைக்கிறேன்.

உலகக்கோப்பைத் தொடரில் அனைத்தும் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர் 1-1 என உள்ளதால், 3வது ஒருநாள் போட்டி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும், என்றார்.

Share this story