நடுவர் என்ன கேட்டார்? என பாண்ட்யா கேட்ட கேள்விக்கு, ரோகித் பதில்..

By 
pandya6

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12ஆவது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும், பாபர் அசாம் 49 ரன்களும் எடுத்தனர்.

பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் 16 ரன்களிலும், விராட் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 23 ஓவர்களிலேயே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித் சர்மா 86 ரன்களில் ஆட்டமிழந்து அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.

எனினும் இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 300 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தார். இந்த நிலையில் தான் மைதானத்தின்போது பைசெப்ஸ் காட்டியதற்கான காரணம் குறித்து கேட்ட ஹர்திக் பாண்ட்யாவிற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் எப்படி இவ்வளவு பெரிய சிக்ஸர் அடிக்கிறேன், எந்தவித முயற்சியும் இன்றி அசால்ட்டாக அடிக்கிறேன் என்று நடுவர் என்னிடம் கேட்டார். மேலும், நீங்கள் வைத்திருக்கும் பேட்டால் இது சாத்தியமானதா என்று கேட்டார். அதற்கு நான் இல்லை இல்லை அது என்னுடைய ஹேண்ட்பவரால் சாத்தியமானது என்றேன்' என கூறியுள்ளார்.

Share this story