என் கேள்விக்கு என்ன பதில்? : கிறிஸ் கெயில் டென்சன்

What is the answer to my question  Chris Gayle Tenson

கிறிஸ் கெய்ல் சமீப காலமாக சரியாக ஆடவில்லை. அதனால், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் ஆடும் லெவனில் அவரை சேர்ப்பதில் முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்லி அம்புரோஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதனால், கோபமடைந்துள்ள அதிரடி வீரர் 42 வயதான கிறிஸ் கெய்ல், ‘ மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அம்புரோஸ் இவ்வாறு விமர்சிக்கிறாரா? என்பது தெரியவில்லை.

அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. எப்போது அவரை பார்த்தாலும், எதிர்மறையாக பேசுவதை நிறுத்திவிட்டு அணிக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறுவேன். 

மற்ற முன்னாள் வீரர்கள் தங்களது அணிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். 

இதேபோல், 20 ஓவர் உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் எங்களுக்கு ஏன் முன்னாள் வீரர்கள் ஆதரவு அளிக்கக்கூடாது?’ என்றார்.

Share this story