சென்னை ரசிகர்களின் பலம் எத்தகையது? : டோனியின் நெகிழ்ச்சிப் பேச்சு..

What is the strength of Chennai fans  Tony's flexible speech ..

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. 

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நடைபெற்ற இவ்விழாவில் அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் டோனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

வாழ்த்து :

சென்னை அணியின் கேப்டன் டோனி, வெற்றிக் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். 

விழாவில் டோனி பேசுகையில், 'தமிழகம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருப்பதாகவும், தனது முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் தொடங்கியது என்றும் குறிப்பிட்டார்.

சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின்போதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அளப்பரியது என்று கூறிய டோனி,  சென்னை அணியின் ரசிகர்கள் பலம் தமிழ்நாட்டைக் கடந்தது என்றார். 

கடைசிப் போட்டி :

5 ஆண்டுகள் கடந்தாலும்கூட நான் விளையாடும் கடைசி போட்டி சென்னையில்தான் என்றும் தெரிவித்தார்.

சிஎஸ்கே அணி உரிமையாளர் பேசும்போது, 'சென்னை அணிக்கு டோனி கேப்டனாக தொடர்ந்து நீடிப்பார்' என தெரிவித்தார்.
*

Share this story