டி20 உலகக்கோப்பை டெத் ஓவர்களில், அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் யார்.?

By 
tt2

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை, நெதர்லாந்து உள்பட 20 அணிகள் இடம் பெற்று விளையாடின.

அரையிறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இந்தியா என்று 4 அணிகள் முன்னேறின. கடைசியாக தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா மட்டுமே இறுதிப் போட்டிக்கு சென்றன. கடந்த 29 ஆம் தேதி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றி வரலாற்று சாதனையில் இடம் பிடித்தது.

இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே டி20 உலகக் கோப்பை தொடரை 2 முறை கைப்பற்றியிருந்தன. தற்போது இந்தப் போட்டியலில் இந்திய அணியும் இடம் பிடித்துள்ளது.

இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் அக்‌ஷர் படேல் காரணமாக இருந்தாலும், பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழத்தியவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஃபசல்ஹக் ஃபரூக்கி 17 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவர் 8 போட்டிகளில் 8 இன்னிங்ஸ் விளையாடி 17 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். சிறந்த பந்து வீச்சாக 9 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் 17 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார். இவரது சிறந்த பெஸ்ட் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது. 3ஆவது இடத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா இருக்கிறார். இவர், 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 4ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே இருக்கிறார். இவர், 15 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி 5ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர்களில் நட்சத்திர பவுலரான பும்ரா இடம் பெறவில்லை.

இதற்கு மாறாக இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுள்ளார். இவர் 8 போட்டிகள் விளையாடி 17 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பவுலர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

மேலும், டெத் ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். அர்ஷ்தீப் சிங் 8.2 எகனாமி ரேட்டுடன் 9 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதே போன்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் டெத் ஓவர்களில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். ஆனால், அவரது எகனாமி ரேட் 8.9 ஆகும்.

இவர்களது வரிசையில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 8 விக்கெட்டுகளுடன் இடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து 7 விக்கெட்டுகளுடன் இந்திய அணியின் நட்சத்திர பவுலரான ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story