பஞ்சாப் அணியில் இருந்து, திடீரென விலகியது ஏன்? : கிறிஸ் கெய்ல் விளக்கம்

Why did he suddenly leave the Punjab team  Chris Gayle Description

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று எதிர்கொள்ள இருக்கிறது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். 

இந்நிலையில், திடீரென ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று தாக்காமல் இருக்க, வீரர்களுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சோர்வு ஏற்பட்டதால் இந்த முடிவுக்கு கிறிஸ் கெய்ல் வந்துள்ளார்.

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘கடந்த சில மாதங்களாக கரீபியன் பிரிமீயர் லீக், தற்போது ஐ.பி.எல். ஆகியவற்றின் பாதுகாப்பு வளையத்தில் (Bio-Bubble) இருந்துள்ளேன். 

மனரீதியில் புத்துணர்ச்சி பெற்று, புதுத்தெம்புடன் வர விரும்புகிறேன்.

டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவுவதற்கான மீண்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். 

இதனால், துபாயில் ஓய்வு எடுக்க இருக்கிறேன். இதற்கான நேரத்தை கொடுத்த பஞ்சாப் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

அணிக்கு என்னுடைய வாழ்த்து மற்றும் நம்பிக்கையை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வாழ்த்துகள்’ என்றார்.
*

Share this story