விக்கெட் வின்னர் : பும்ரா சாதனையை முறியடித்தார் ஹர்ஷல் பட்டேல்

Wicket-winner Herschelle Patel breaks Bumrah record

ஐபிஎல் கிரிக்கெட்டில், ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் ஹர்ஷல் பட்டேல்.

ஒருவர் சாதனையை மற்றொருவர் முறியடிப்பது, புதிய சாதனையாக சிறப்பு பெற்று வருகிறது.

இவ்வகையில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ஹர்ஷல் பட்டேல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம், இந்த சீசனில் 29 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். பும்ரா கடந்த சீசனில 27 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 

இதுதான் ஒரு சீசனில் இந்திய பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய அதிக விக்கெட்டாக இருந்தது. தற்போது, ஹர்ஷல் பட்டேல் இந்த சாதனையை முறியடித்துள்ளார். 

ஆர்.சி.பி. இன்னும் ஒரு லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டியுள்ளது.

Share this story