உலகின் நம்பர்-1 வீரராக களம் இறங்கும் இந்திய வீரர் அமித் பங்கால் சாதிப்பாரா?

By 
Will Amit Bangal, the world's No. 1 Indian, make it to the field

உலகின் நம்பர்-1 வீரராக டோக்கியோ ஒலிம்பிக்கில் அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய குத்துச்சண்டை வீரர்
அமித் பங்கால்,
காலிறுதி வரை எந்தவொரு வலுவான சவாலையும் எதிர்கொள்ள வாய்ப்பில்லை.

23-ந்தேதி :

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. 

குத்துச்சண்டை போட்டிகள் ஜூலை 24-ம்தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில், இந்தியா சார்பில் 9 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

இவர்களில் ஆசிய சாம்பியனும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான அமித் பங்கால், உலகின் நம்பர்-1 வீரர் என்ற அந்தஸ்துடன் போட்டியில் களமிறங்குகிறார். இவர் ஆடவருக்கான பிளைவெயிட் 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க உள்ளார்.

டாப்-5 :

அமித் பங்கால் தவிர, பிரான்சின் பிலால் பென்னாமா, அல்ஜீரியாவின் முகமது பிலிசிஇ சினாவின் ஹூ ஜியாங்குவான், உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதின் ஜாய்ரோவ் ஆகியோர் டாப்-5 இடங்களில் உள்ளனர். 

இவர்களில், பென்னாமா, ஜியாங்குவானை தலா ஒரு முறை அமித் பங்கால் வீழ்த்தி உள்ளார். ஜாய்ரோவுடன் மோதிய 3 போட்டிகளிலும் பங்கால் தோல்வி அடைந்துள்ளார். 

நம்பர்-1 என்ற தரவரிசையானது, பங்காலுக்கு ஒலிம்பிக்கில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். 

காலிறுதி வரை அவர் எந்தவொரு வலுவான சவாலையும் எதிர்கொள்ள வாய்ப்பில்லை. தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீரர்கள், காலிறுதிக்கு முன்பு நேருக்குநேர் மோதமாட்டார்கள்.

Share this story