'தல' போல பெரிய மனசு வருமா? : ஐபிஎல் கோப்பையை ஜடேஜா-ராயுடுவை வாங்க வைத்து மகிழ்ந்த டோனி; வைரல் நிகழ்வு..
May 30, 2023, 17:22 IST
By

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஜடேஜா மிகவும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். கடைசி 2 பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்து ஐ.பி.எல். கோப்பையை 5-வது முறையாக பெற்றுக் கொடுத்தார்.
வெற்றிக்கான பவுண்டரியை ஜடேஜா அடித்தபோது வெளியே கேப்டன் டோனி கண்ணை மூடி அமைதியாக இருந்தார். பின்னர் தான் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜடேஜா அருகில் வந்தபோது டோனி அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இது பார்ப்பதற்கு மெய்சிலிர்க்க வைத்தது. கோப்பையை வாங்கும் தருணத்தில் ஜடேஜாவையும், அம்பதிராயுடுவையும் அழைத்து சென்று வாங்க வைத்து டோனி ரசித்தார். இந்த வீடியோ மற்றும் இரண்டு புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.