ஹைதராபாத்தை வீழ்த்திய தமிழக அணி, கர்நாடகாவை தெறிக்கவிடுமா.?

By 
Will the Tamil Nadu team, which defeated Hyderabad, beat Karnataka

சையத் முஷ்டாக் அலி டிராபியில், விதர்பா அணிக்கு எதிரான போட்டியில், கர்நாடகாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோகன் கதம் 56 பந்தில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதிச் சுற்றுக்கு தமிழ்நாடு, ஐதராபாத், விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள்  தகுதிபெற்றன.

ஆல்-அவுட் :

இந்நிலையில், நடைபெற்ற முதல் அரையிறுதியில் தமிழ்நாடு, ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 90 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

தமிழக அணி சார்பில் சரவணன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முருகன் அஷ்வின், முகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இறுதிப்போட்டி :

இதையடுத்து, 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 34 ரன், விஜய் சங்கர் 43 ரன் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தனர். இதன்மூலம் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இதேபோல், விதர்பா, கர்நாடகம் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதியில் கர்நாடகம் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணியை எதிர்கொள்கிறது.
*

Share this story