விராட்கோலி இதை கேட்பாரா? : ரவி சாஸ்திரி விருப்பம்

Will Virat Kohli hear this  Ravi Shastri Option

இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக இருந்த விராட் கோலி, 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார்.

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது :

20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவார். ஆனால், இப்போது உடனடியாக விலகுவார் என்றால் சொல்ல முடியாது. 

அதே நேரத்தில், டெஸ்ட் கேப்டன் பதவியில் அவர் நீடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 

அவர் பேட்டிங்கிலும், டெஸ்ட் கேப்டனிலும் மட்டுமே கவனம் செலுத்தலாம்' என்றார்.
 
இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக இருந்த கோலி, 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார் என்பது நினைவுகூரத்தக்கது.
*

Share this story