விம்பிள்டன் டென்னிஸ் : அசத்தினார் ஜோகோவிச், அரண்டு போனார் முகுருஜா..

By 
Wimbledon tennis Djokovic out of contention, Mukuruja out of two.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

அசத்தல் வெற்றி :

உலகின் முதல்நிலை வீரரும், 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் குட்லாவை எதிர்கொண்டார். 

இதில் ஜோகோவிச் 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீரரான ஆந்த்ரே ருபலே (ரஷ்யா), அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மற்றொரு ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) தோற்றார். காயத்தால் நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் இறங்கிய அவர் 4-6, 2-6, 2-6 என்ற கணக்கில் கனடா வீரர் டெனிசிடம் தோற்றார்.

அதிர்ச்சித் தோல்வி :

இதைப்போல, 9-வது வரிசையில் உள்ள டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், 13-வது வரிசையில் உள்ள மெர்ட்டன்ஸ் (பெல்ஜியம்), 11-வது இடத்தில் உள்ள முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா), ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோர் வெற்றிபெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Share this story