மகளிர் கிரிக்கெட் ஆட்டம் : வங்காள தேசத்தை வீழ்த்தியது இந்தியா; ரன்ஸ் விவரம்..

By 
w32

இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் மந்தனா 13 ரன், ஷபாலி வர்மா 19 ரன், அடுத்து களம் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன், ஹர்மன்ப்ரீத் கவுர் 0 ரன், யாஷ்டிகா பாடியா 11 ரன், ஹார்லீன் தியோல் 6 ரன், தீப்தி சர்மா 10 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச பெண்கள் அணி ஆடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியின் கேப்டன் மட்டுமே இரண்டு இலக்க ரன்னை எட்டினார். மற்ற வீராங்கனை சொற்ப ரன்னில் வெளியேறினார்.

இதனால் வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

Share this story