மகளிர் உலகக்கோப்பை போட்டி : கனடாவுடன் இந்திய அணி மோதல்..

By 
hoc55

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை 2023-ஐ கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக எஃப்ஐஎச் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.

எஃப்ஐஎச் ஜூனியர் மகளிர் உலக கோப்பை 2023-ல் தொடரில் இந்திய அணி சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. நவம்பர் 29 அன்று கனடாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி, அதற்கு அடுத்ததாக நவம்பர் 30-ந் தேதி ஜெர்மனியுடன் விளையாடுகிறது.

டிசம்பர் 2-ம் தேதி நடைபெறும் கடைசிபோட்டியில் பெல்ஜியத்துடன் இந்திய பெண்கள் விளையாட உள்ளனர். உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி டிசம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.

எஃப்ஐஎச் ஜூனியர் மகளிர் உலக கோப்பையின் கடந்த ஆண்டு இந்தியா வெண்கலப் பதக்கத்தை வெல்லும் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் மூன்றாவது இடத்திற்கான பிளேஆஃப் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றதால் கனவை நனவாக்க முடியவில்லை.


 

Share this story