உலக வில்வித்தை போட்டி : 3 இ3 ந்தியர்கள் வெற்றியை நோக்கி..

World Archery 3 Indians on course for victory ..

 
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ‘ரீகர்வ்’ பெண்கள் தனிநபர் பிரிவில், கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா பகத் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவின் காங் சாய் யங்கை வீழ்த்தி, கால்இறுதிக்கு முன்னேறினார். 

'காம்பவுண்ட்’ ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா 145-142 என்ற புள்ளிக் கணக்கில் சுலோவக்கியாவின் ஜோசப் போசான்ஸ்கியை சாய்த்து, கால்இறுதிக்குள் நுழைந்தார். 

இதன் பெண்கள் தனிநபர் பிரிவில், இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 146-142 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவின் சாவோன் சோவை தோற்கடித்து கால்இறுதியை எட்டினார்.

Share this story