உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி : ஹங்கேரியை வீழ்த்தி ஜெர்மனி, 16 சுற்றுக்கு முன்னேறி அசத்தல்..

By 
hang5

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா விளையாடின. இதில் 18 ரன்களில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

மேற்கு இந்தியத் தீவுகளின் ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

டிகாக் 74 ரன்கள், கேப்டன் மார்க்ரம் 46 ரன்கள், கிளாசன் 36 ரன்கள் மற்றும் ஸ்டப்ஸ் 20 ரன்கள் எடுத்தனர். 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அமெரிக்கா விரட்டியது. ஆண்ட்ரீஸ் கவுஸ் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.

14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஸ்டீவன் டெய்லர் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார், கேப்டன் ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டர்சன், ஷயான் ஜஹாங்கீர் ஆகியோர் விரைந்து விக்கெட்டை இழந்தனர். 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அமெரிக்கா.

6-வது விக்கெட்டுக்கு ஆண்ட்ரீஸ் கவுஸ் மற்றும் ஹர்மீத் சிங் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 22 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஹர்மீத் சிங் ஆட்டமிழந்தார். ஷம்சி வீசிய 18-வது ஓவரில் 22 ரன்கள் எடுத்து அமெரிக்கா அச்சுறுத்தியது. இரண்டாவது இன்னிங்ஸில் ஒரே ஓவரில் எடுக்கப்பட்ட அதிக ரன் ஓவராக அது அமைந்தது.

20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது அமெரிக்கா. ஆண்ட்ரீஸ் கவுஸ் 47 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் 18 ரன்களில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா. ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். நோர்க்யா, கேஷவ் மகாராஜ் மற்றும் ஷம்சி தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

Share this story