"வேர்ல்ட் கப்" குஷி : ஷூவில் ஊற்றி, கூல்ரிங்ஸ் குடித்த வீரர்கள்..

By 
World Cup Kushi Players pouring into shoes and drinking Coolrings.

20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. 

முதலில், பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. 

வெற்றி வந்த வழி :

நியூசிலாந்து அணியில், அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்

173 ரன்கள் அடித்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தார். 38 பந்துகளில், 53 ரன்கள் குவித்து வார்னர் ஆட்டமிழந்தார்.

மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி, 50 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 8  விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, முதல் முறையாக 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றது.

கொண்டாட்டம் :

வெற்றிக்குப் பின்னர், ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் ஓய்வு அறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

முக்கியமாக, ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் இருவரும் ஷூவில் குளிர்பானம் ஊற்றி குடித்து ஆடினர்.

Share this story