உலகக் கோப்பை மேட்ச் :  ஓமனை வீழ்த்துமா, இன்று வங்காளதேசம்.?

By 
World Cup Match Will Bangladesh beat Oman today

 
டி 20 உலகக்கோப்பையின் இன்றய ஆட்டத்தில் வங்காளதேசம்-ஓமன் அணிகள் மோதுகின்றன.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

மஸ்கட்டில் இந்திய நேரப்படி, இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில், ஜீஷன் மசூத் தலைமையிலான ஓமன் அணி, மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேசத்துடன் மல்லுகட்டுகிறது. 

இந்த ஆட்டம், வங்காளதேசத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். 

பேட்டிங்கில் சொதப்பியதால், முதலாவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் வீழ்ந்த வங்காளதேச அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதே நேரத்தில், ஓமன் அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்று, அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த, தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். 

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
*

Share this story