உலகக் கோப்பை போட்டி : பாகிஸ்தான் அணியில், வீரர்கள் திடீர் மாற்றம்

World Cup Sudden change of players in Pakistan squad

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடரில் வீரர்களின் செயல்பாடு அடிப்படையில், உலக கோப்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கடைசி நாள் :

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. 

இதில், பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் மாற்றம் செய்ய, நாளை கடைசி நாளாகும்.

இந்நிலையில், 20 ஓவர் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

3 வீரர்கள் :

ஏற்கனவே, அணியில் இடம் பெற்ற பேட்ஸ்மேன் குஷ்தில் ஷா, துணை விக்கெட் கீப்பர் அசம்கான், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்சைன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.

ஹைதர் அலி, சர்பராஸ் அகமது, பஹர் ஜமான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தற்போது, பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடரில் வீரர்களின் செயல்பாடு அடிப்படையில், உலக கோப்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Share this story