உலகக்கோப்பை பயிற்சிப் போட்டி இன்று : தெறிக்க விடுவது இந்தியாவா? இங்கிலாந்தா?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை பயிற்சிப் போட்டி இன்று (செப்டம்பர் 30) நடைபெற உள்ளது. ஏற்கனவே, இந்திய அணி தன் முன்னணி வீரர்களுடன் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது.
அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 352 ரன்கள் குவித்தது. அந்த பெரிய இலக்கை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. குறிப்பாக 350 ரன்கள் போன்ற பெரிய இலக்குகளை சேஸிங்கே செய்யத் தெரியாத அணி போல ஆடியது இந்தியா. பின்வரிசை பேட்ஸ்மேன் ஆன ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் மறக்க முடியாத ஒரு காவியம்.
கடைசி 10 ஓவர்களில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலும் ஜடேஜா ஒரு பந்துக்கு ஒரு ரன் என கணக்கு போட்டு ஆடியதை மறக்கவே முடியாது. மிடில் ஆர்டரிலும் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு தவறை செய்தனர். ரோஹித் சர்மா, விராட் கோலி அதிரடி ஆட்டம் ஆடி அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை ராகுல், ஸ்ரேயாஸ் அப்படியே தொடரவில்லை.
அதாவது ரோஹித், கோலி ஆட்டமிழந்த போது ரன் ரேட் 6.5 முதல் 7 வரை இருந்தது. அதை அப்படியே தொடராமல் பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் தான் அவர்களும் ரன் சேர்த்தனர். இதுவரை ஒருநாள் போட்டிகளில் சொல்லிக் கொள்ளும்படி எந்தப் போட்டியையும் இவரால் தான் வென்றது என்று சொல்ல முடியாத "சூர்யகுமார் யாதவ்" என்ற ஒரு பினிஷரை வளர்த்து வருகிறார் கேப்டன் ரோஹித் சர்மா. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் எதுவும் செய்யவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என 7 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.
இந்த பயிற்சிப் போட்டிக்கு திரும்பும் சுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அடுத்து ரோஹித் சர்மா, விராட் கோலி பேட்டிங்கில் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டம் ஆடும் அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர். மற்ற யாரும் சேஸிங்கின் போது அதிக அழுத்தத்தில் அதிரடி ஆட்டம் ஆடும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்களா? என்பது சந்தேகமே.
ஆக மொத்தத்தில், கில், ரோஹித், கோலி என மூன்று விக்கெட்களை வீழ்த்தினாலே இந்திய அணியின் சேஸிங் முடிவுக்கு வந்துவிடும். இந்த பலவீனத்தை இங்கிலாந்து அணி இந்நேரத்துக்கு யூகித்து திட்டம் தீட்டி இருப்பார்கள். துரதிர்ஷ்டம்.. முதலில் தோனி, கோலி இடம் தர மறுத்தார்கள்.. இப்போ ரோஹித்.. உடைந்து போன அக்சர் பட்டேல்.
இதில் இந்திய அணிக்கு எங்கே சிக்கல் என்றால் இங்கிலாந்து அணியை 350 ரன்களுக்குள் சுருக்குவதுதான். இங்கிலாந்து அணி வீரர்கள் அடித்தால் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் தான் அடிப்போம் என உறுதிமொழி எடுத்தவர்கள். முதல் விக்கெட்டில் இருந்து கடைசி விக்கெட் வரை அதிரடி ஆட்டம் ஆடும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது அந்த அணி. இந்தியாவால் இங்கிலாந்து அணியை 300 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்ய முடிந்தால் இந்திய அணி வெற்றி கொள்ளலாம். ஆனால், ரோஹித் படைக்கு சிக்கல் தான்.