உலக டென்னிஸ் தரவரிசை வெளியீடு : ஜோகோவிச், நடால் எத்தனையாவது இடம்?

World Tennis Rankings Release Djokovic, Natal How much space

டென்னிஸ் உலகில் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் ரபேல் நடால். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 

இவர், பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

அதில் இருந்து தற்போது வரை ரபேல் நடால் டென்னிஸ் போட்டியில் களம் இறங்காமல் உள்ளார். 

இதனால், உலக டென்னிஸ் தரவரிசையில் 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். 

அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டாலும், ஜோகோவிச் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்கள். டொமினிக் தீம் 6-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

அமெரிக்க ஓபனை வென்ற ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ் 2-வது இடத்திலும், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 3-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4-வது இடத்திலும்  உள்ளனர்.
*

Share this story