தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மறைவு : ஜனாதிபதி இரங்கல்
 

By 
Yashpal Sharma passes away

இந்திய கிரிக்கெட் அணி, கடந்த 1983-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்று நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தது. அந்த அணியில் இடம் பெற்றிருந்தவர் யாஷ்பால் சர்மா (வயது 66). மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு அரைசதம் :

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்த அவர், கடந்த 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி, இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.  உலக கோப்பை தொடரில் 2 அரைசதங்கள் அடித்துள்ளார்.

அந்த தொடரின் முதல் ஆட்டத்தில், பலம் வாய்ந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.  இந்த ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய யாஷ்பால் சர்மா 89 ரன்கள் குவித்தார். 

அதேபோல், அந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 40 ரன்கள் (40 பந்துகள்), அரையிறுதியில் 61 ரன்கள் (115 பந்துகள்) எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

ஜனாதிபதி இரங்கல் :

ஓய்வு பெற்ற பின் இந்திய கிரிக்கெட் வாரியம், பஞ்சாப் மற்றும் அரியானா கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்புகளையும் வகித்து வந்த அவர், தனது மனைவி, இரு மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அனுராக் மற்றும் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
*

Share this story