10 ஆடு, 1000 கிலோ மீன், 200 கிலோ இறால் : ஆடிச் சீர் செய்த அசத்தல் மாமனார்

By 
 10 goats 1000 kg of fish 200 kg of shrimp

மனைவி மட்டுமல்ல, மாமனார் அமைவதுகூட இறைவன் கொடுத்த வரம்தான்.

10 ஆடுகள், ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறாலுடன் மருமகனுக்கு சீர் செய்த மாமனார் குறித்து பார்ப்போம்.

பாரம்பரிய விழா :

தெலுங்கு பேசும் மக்கள் ஆண்டுதோறும் ஆஷாதம் மாத விழாவை கொண்டாடுகின்றனர். இது பெனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக ஜூன், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும்.

புதுமண தம்பதிகளுக்கு ஆடிமாதம் சீர் கொடுத்து கொண்டாடுவது தமிழர்களின் வழக்கமாகும்.

அதேபோல, தெலுங்கு பேசும் மக்கள் ஆண்டுதோறும் ஆஷாதம் மாத விழாவை கொண்டாடுகின்றனர். இது பெனாலு என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவாக ஜூன், ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும்.

புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் ஆஷாதம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வண்டி வண்டியாக சீர் :

இவ்விழாவையொட்டி ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு, ராஜமுந்திரியை சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தினார்.

1,000 கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு, 50 கோழி, ஆயிரம் கிலோ காய்கறி, 250 கிலோ மளிகை பொருட்கள், 250 கிலோ ஊறுகாய், 50 வகை இனிப்புகள் என வண்டி, வண்டியாக ஊர்வலமாக சீர் வைத்தார். இதை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

நல்ல கவனிப்பு :

இதுகுறித்து, பலராமகிருஷ்ணா கூறியதாவது :

'தனது மகள் பிரத்யுஷாவுக்கும், பவன்குமாருக்கும் கடந்த மாதம் 21-ந்தேதி திருமணம் நடந்தது. 

தனது மகளை, மருமகன் நன்றாக கவனித்துக்கொள்வதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், இந்த சீர்வரிசையை வழங்கினோம்' என்றார்.

Share this story