மின்னல் தாக்கி 10 பேர் பரிதாப பலி..

By 
minnal2

ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் உட்பட ஒடிசாவின் கடலோரப் பகுதியில் மின்னல் தாக்குதலுடன் கனமழை பெய்துள்ளது. மதியம் 90 நிமிட இடைவெளியில் முறையே 126 மிமீ மற்றும் 95.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ததில் மின்னல் தாக்கியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரில் 2 பேரும், அங்குல், பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதைத்தவிர, குர்தாவில் 3 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர். அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

 

Share this story