12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

12 IPS officers transferred Government of Tamil Nadu orders

தமிழகத்தில், 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை போலீஸ் கமிஷனர், நெல்லை, திருச்சி, வேலூர் மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் செயலாளர் பிரபாகர் பிறப்பித்த உத்தரவில்,

* நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ராஜேஷ்கண்ணா, வேலூர் மாவட்ட எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பிரதிப் குமார், கோவை மாநகர காவல் ஆணையராக செய்யப்பட்டுள்ளார்.

* சிபிசிஐடியில் சிறப்பு விசாரணைப் பிரிவு எஸ்.பி.,யாக மூர்த்தியும் திருச்சி எஸ்.பி.,யாக சுஜித்குமாரும்  சென்னை, உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக செல்வகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* சென்னை போலீசின் கிழக்கு சட்டம் ஒழுங்குப்பிரிவு இணை கமிஷனராக எஸ்.பிரபாகரனும், சென்னை போலீசின் தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராக ராஜேந்திரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Share this story