காதல் திருமணம் செய்த 18 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: பகீர் தகவல்கள்..

By 
rprp

இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பல நபர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது, அவருக்கும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவனேஷ் பாபு(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் தனிமையில் வசிப்பதை அறிந்த அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி இளம்பெண் அவருடன் மேட்டுபாளையம் வந்தார்.  

இதையடுத்து சிவனேஷ் பாபு மேட்டுப்பாளையம் ராமசாமி நகரில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். பின்னர் தனது நண்பர் ராகுலை (24) சிவனேஷ் பாபு வீட்டிற்கு அழைத்து வந்து இளம்பெண்ணிடம் அறிமுகம் செய்துள்ளார். அப்போது திடீரென ராகுல் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால், இருவரும் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியே இளம்பெண்ணை பலருக்கு விருந்தாக்கியுள்ளனர். ஒருவழியாக அந்த கொடூரர்களிடம் இருந்து தப்பித்த இளம்பெண் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். 

இதுகுறித்து உறவினர்கள் இளம்பெண்ணுடன் சென்று மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி  சிவனேஷ் பாபுவை தேடி வருகின்றனர்.

Share this story