ரயில்களில் 25 சதவீதம் கட்டணம் குறைப்பு : ரயில்வே வாரியம் அறிவிப்பு

By 
vande3

* ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வந்தே பாரத் உள்ளிட்ட சில ரெயில்களில் ஏசி சேர் கார் கட்டணம் குறைக்கப்படுகிறது. ஏசி சேர் கார் மற்றும் எக்சிகியூடிவ் வகுப்பு கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ள டிக்கெட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது. கட்டணம் எதுவும் திருப்பி தரப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அதை பராமரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வெள்ளை நிறம் என்பதால் எளிதில் தூசு படிந்து விடுகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் ரெயில் பெட்டிகளை கழுவினாலும் அதனை சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை என்ற நிலையும் உள்ளது.

இதை கருத்தில் கொண்டு இந்த வண்ண மாற்றம் வர உள்ளது. ரெயில்வே அனுமதி கிடைத்ததும் வந்தேபாரத் ரெயில் பெட்டிகள் ஆரஞ்சு மற்றும் சாம்பல் கலரில் உருவாக உள்ளது. விரைவில் சென்னை- விஜயவாடா வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.


 

Share this story