30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய திருமண விடுப்பு : சீனா அறிவிப்பு எதற்கு தெரியுமா?

honey

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, சீனாவில் 1,000 பேருக்கு 6.77 பிறப்புகள் என்ற மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை பதிவு செய்தது. இதனால், மக்கள் தொகையை அதிகரிக்க சீனா பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

இந்நிலையில், திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் சீனாவில் உள்ள சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

முன்னதாக, சீனாவில் குறைந்தபட்ச ஊதியத்துடன் கூடிய திருமண விடுப்பு மூன்று நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மூன்று நாட்கள் விடுப்பு 30 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, வடமேற்கு மாகாணமான கன்சு மற்றும் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாகாணமான ஷாங்க்சி ஆகியவை 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குகின்றன.

இதுகுறித்து, தென்மேற்கு நிதி மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சமூக மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் யாங் ஹையாங் கூறுகையில், "திருமண விடுமுறையை நீட்டிப்பதன் மூலம் கருவுறுதல் விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

திருமண விடுப்பு நீட்டிப்பு முக்கியமாக சில மாகாணங்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது" என்றார்.

Share this story