தமிழகத்தில் 30,000 சிறப்பு முகாம்கள் : வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை வேண்டுகோள்

By 
30,000 special camps in Tamil Nadu Health Department appeals to take advantage of the opportunity

தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாளை 5-வது முறை :

கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு முகாம்கள் மூலம் இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்படுவதால், இதனைத் தொடர்ந்து நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

4 வாரமாக நடைபெற்ற முகாம்கள் மூலம் சுமார் 80 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 

நாளை 5-வது முறையாக, தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

வேண்டுகோள் :

இந்த முகாம்களில், இதுவரையில் தடுப்பூசி போடாத தகுதியுள்ள பொதுமக்கள் பங்குபெற, அனைத்து மாவட்டங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this story