ரூ.22,500 கோடியில் 341 கி்.மீ. நீள நெடுஞ்சாலை திறப்பு : பிரதமர் மோடி உ.பி. பயணம்

By 
341 km at a cost of Rs 22,500 crore. Long Highway Opening Prime Minister Modi U.P. Travel

பிரதமர் மோடி நாளை உத்தரப்பிரதேசம் பயணம் செல்ல உள்ளார். அங்கு பூர்வான்ச்சல் விரைவு சாலையை திறந்து வைக்க உள்ளார். 

அவர், நாளை மதியம் 1.30 மணியளவில்  இந்த சாலையை திறந்து வைக்கிறார். 

அதனை தொடர்ந்து, இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்கிறார். 

341 கி.மீ. நீளம் :

புதிதாக கட்டமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் 3.2 கி.மீ நீளத்துக்கு விமானங்கள் தரையிரங்கும் வண்ணம் விமான ஓடுதளமும் அமைக்கப்பட்டுள்ளது. 

அவசர காலங்களில், இந்த ஓடுபாதையை பயன்படுத்தி, விமானங்கள் தரையிறங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்வான்ச்சல் விரைவு சாலை 341 கி.மீ நீளம் உடையது. லக்னோ-சுல்தான்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 731ல் அமைந்துள்ள இந்த நெடுஞ்சாலை சவுதுசாராய் கிராமத்தில் இருந்து ஆரம்பமாகிறது. அங்கு தொடங்கி உத்தரப்பிரதேச-பீகார் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள ஹைடாரியா கிராமத்தில் முடிவடைகிறது.

இது 6 வழிச்சாலையாக கட்டமைக்கப் பட்டுள்ளது. வருங்காலங்களில் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூபாய் 22 ஆயிரத்து 500 கோடி செலவில், இந்த நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு, இந்த கட்டமைப்பு உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பழங்குடியின சமூக நிகழ்ச்சி :

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கு இன்று சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற பழங்குடியின சமூக நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்றார்.

பிரதமர் வருகையையொட்டி, அவருடன் நெருங்கிச் செல்லக்கூடிய கவர்னர் மங்குபாய் படேல், முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், போலீசார், அதிகாரிகள், பழங்குடியினர் என சுமார் 350 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*

Share this story