பொதுமக்கள் 39 பேர் பலி : சூடான் இராணுவ ஆட்சிக்கு, அமெரிக்கா கண்டனம்

By 
 39 civilians killed US condemns Sudanese military rule

சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. 

அந்த ஆட்சியில், அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.

ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, கடந்த மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

பொதுமக்கள் போராட்டம் :
 
அதேவேளை ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சூடானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில், ஏற்கனவே 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜனநாயக ஆட்சி :

இதற்கிடையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஹர்டோமின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போராட்டக்காரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். 

இதனால், சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சூடான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேலும், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும்' என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Share this story