விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல் : 8 பேர் கைது

By 
gold11

டெல்லி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்: உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர் கைதுடெல்லி விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு மறைத்து கொண்டு வந்த ஐந்து கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பெண்கள் உள்பட 8 உஸ்பெகிஸ்தானியர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம், தங்கத்தை யாருக்காக கொண்டு வந்துள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து 5,319 கிராம் எடைகொண்ட 50 தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 2.92 கோடி ரூபாய் ஆகும்.

தற்போது விமான நிலையத்தில் உள்ள லக்கேஜ் டிராலியில் தங்கத்தை கடத்துவது அதிகரித்து வருவதாக அதிகாரகிள் தெரிவித்தனர். ரகசிய தகவலின்படி அதிகாரிகள் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை வருகைக்கான வாசல் பகுதியில் இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது லக்கேஜ் டிராலியில் பேஸ்ட் வைத்து ஒட்டி மறைத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
 

Share this story