5 லட்சம் கோவிஷீல்டு இன்று சென்னை வருகை..மாவட்ட வாரியாக விநியோகம்..

By 
5 lakh Govshield arrives in Chennai today..district wise distribution ..

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மத்திய ஒதுக்கீடு இல்லாததால், தமிழகத்தில் குறைவான அளவே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டங்களுக்கு விநியோகம் :

இந்த மாதம், அரசு மருத்துவமனைகளுக்கு, 43 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டன. அவை படிப்படியாக விநியோகிக்கப்பட்டு செலுத்தப்படுகிறது. கூடுதலாக, 15 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மாலை 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகிறது. விமானம் வழியாக வரும் இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது.

ஆகஸ்ட் மாத ஒதுக்கீடு :

இந்த மாதத்திற்கான ஒதுக்கீடு இத்துடன் நிறைவு பெறுகிறது. ஆகஸ்டு மாதத்திற்கான ஒதுக்கீடு, இதைவிட கூடுதலாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று 3 லட்சத்து 66 ஆயிரத்து 584 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
இதுவரையில், 2 கோடியே 10 லட்சத்து 62 ஆயிரத்து 693 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share this story