ரூ.5,000 டூ ரூ.25,000 வரை அழகிகள் வாடகைக்கு...

party

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள் முழு வீச்சில் களைகட்டியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குழு நடனங்கள், ஜோடி நடனங்கள் என பல்வேறு விதமான நடன நிகழ்ச்சிகளும் நட்சத்திர ஓட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஜோடியாக சேர்ந்து நடனமாடும் கொண்டாட்டங்களில் வேறு யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த இடத்துக்கு ஜோடி இருந்தால் மட்டுமே செல்ல முடியும். இதுபோன்ற ஜோடி நடன கொண்டாட்டத்தில் பங்கேற்று நடனமாடுவதற்கு வாலிபர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இப்படி சென்று நடனமாட வாலிபர்கள் பலர் 'வாடகை ஜோடி'களை 'புக்' செய்து கொண்டாட்டத்துக்கு தயாராகியுள்ளனர். இதற்காக 'மிடில் கிளாஸ்' முதல் 'ஹை கிளாஸ்' நடன அழகிகள் வரை சென்னையில் வாடகைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று இரவில் வந்து நடனமாடுவதற்கு மட்டும் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் அழகிகளை வாலிபர்கள் தற்காலிக வாடகைக்கு அமர்த்தி உள்ளனர்.

நடன நிகழ்ச்சிகள் முடிந்ததும் அழகிகளை பத்திரமாக வீட்டு அருகே கொண்டு விட்டு விட வேண்டும் என்கிற ஒப்பந்தத்துடனேயே இதுபோன்ற அழகிகளை வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அழைத்து செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இத்தகைய இளைஞர்களின் புத்தாண்டு சபதம் என்னவாக இருக்கும்? என்பதே மிகப்பெரிய கேள்வி.

Share this story