மத்திய அரசு வேலைக்கு 51,000 பேர் நியமனம்; பிரதமர் மோடி நிகழ்ச்சி..
Aug 28, 2023, 15:48 IST
By

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ரெயில்வே தேர்வு வாரியம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) உள்ளிட்டவற்றின் வாயிலாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
புதிதாக தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் முகாம்கள் (ரோஜ்கர் மேளா) பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று (திங்கட்கிழமை) காலை பிரதமர் மோடி காணொலி மூலம் வழங்கினார். மேலும் புதிதாக நியமன ஆணை பெற்றவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.