மசூதி இடிந்து 7 பேர் பலி, 23 பேர் படுகாயம்..
Aug 13, 2023, 15:58 IST
By

நைஜீரியாவின் கடுனா மாகாணம் ஜாரியா நகரில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதியில் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகள், தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்தனர்.
மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மசூதி, 1830-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பழமையான மசூதி என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கடுனா கவர்னர் உபாசானி கூறும்போது, இந்த விபத்து இதயத்தை உடைக்கிறது. இந்த பேரழிவு குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.