முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று ரூ.4,755 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

By 
47

நாட்டிலேயே முதல் முறையாக சர்வதேச அறைகலன் பூங்கா உருவாக்க திட்டமிட்டு 1,156 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுகிறது.

முழுக்க முழுக்க சூரிய மின்சக்தி உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு சேகரிப்பு மற்றும் தங்களுக்கான சுத்திகரிப்பு வசதி ஆகியவற்றை சிறப்பு வசதிகளுடன் பசுமை சார்ந்த கருத்துருக்களுடன் இப்பூங்கா அமைய உள்ளது.

வேலை வாய்ப்பு :

இத்திட்டம் முதல் கட்டமாக 4 முதல் 5 ஆண்டுகளில் முழுமையாக செயல்படும். முதல் கட்டத்தில் ரூ. 1,500 முதல் 1,800 கோடி அளவிற்கான முதலீடுகள் மற்றும் ஒரு லட்சத்து பத்தாயிரம் முதல் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளது.

இரண்டாம் கட்டமாக 8 முதல் 10 ஆண்டுகளில் முழுமையாக செயல்படும் போது ரூ. 3,500 முதல் 4,500 கோடி அளவிற்கான முதலீடுகள் மற்றும் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இதற்காக இன்று 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

மரச்சாமான் மற்றும் தோல் பொருட்களால் ஆன அறைகலன் பொருட்களை உற்பத்தி செய்ய உள்ள இந்த 8 திட்டங்கள் மூலம் ரூ. 2,845 கோடி முதலீடு மற்றும் 11 ஆயிரத்து 450 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்

நிலம் ஒதுக்கீடு :

விழாவில் ஹைடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் டெக்னிக் பிரான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

தொழில் துறை சார்பில் ரூ. 1.643 கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரத்து 653 பேருக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

உணவு பதப்படுத்துதல் ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி மற்றும் உரங்கள் ரசாயனங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை போன்ற மாவட்டங்களில் இந்நிறுவனங்கள் அமைய உள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை சார்பில் ரூ. 267 கோடி முதலீடு மற்றும் 2,373 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இந்த முதலீடுகள் கட்டுமானம், உணவு பதப்படுத்துதல் கண்ணாடி உற்பத்தி ஆடைகள் மற்றும் ஜவுளி சூரிய ஒளி அடுப்புகள் உரங்கள் மற்றும் மருத்துவ குணங்கள் ஆகிய துறைகளில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன

மொத்தம் மேற்கொண்ட 33 திட்டங்களின் வாயிலாக ரூ. 4,755 கோடி முதலீடு மற்றும் 17 ஆயிரத்து 476 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

Share this story