தென்மேற்கு பருவமழை குறித்து, வானிலை மையம் தகவல்
 

By 
kutralam1

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி, வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும்.
 
அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து, தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அறிவிக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். 

ஆனால், இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்தன.

இதையடுத்து வருகிற 27-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

தற்போது, சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27-ந் தேதிக்கு பதில் 23ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் கொட்டும்.
*

Share this story