இந்தியாவின் அரிசி ஏற்றுமதி இரட்டிப்பு : மத்திய அரசு தகவல்

By 
piyush

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 2013-14 மற்றும் 2021-22 க்கு இடையில் 109 சதவீதம் வளர்ந்துள்ளது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் டுவீட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 109% அசுர வளர்ச்சியைப் பெறுகிறது" என்று அவர் கூறினார். 

நரேந்திர மோடி அரசின் கொள்கைகள் விவசாயிகள் உலக சந்தையை அணுகவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுவதாக அவர் கூறினார். 

"இந்தியா தி ரைஸ் பேஸ்கெட் ஆஃப் தி வேர்ல்ட்" என்ற தலைப்பில் ஒரு படத்தில், அரிசி ஏற்றுமதிக்கான புள்ளிவிவரங்களை அவர் டுவீட் செய்தார்.

2013-14 நிதியாண்டில் பாஸ்மதியைத் தவிர்த்து அரிசி ஏற்றுமதி 2,925 மில்லியன் டாலராக இருந்தது.

மேலும் 2021-22 நிதியாண்டில் அது 109 சதவீதம் அதிகரித்து 6,115 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

தனித்தனியாக, 2021-22 நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 9.24 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், 

அரிசி ஏற்றுமதி ஆண்டுக்கான மொத்த இலக்கில் 102 சதவிகிதத்தை எட்டியுள்ளதாகவும் விவசாய அமைச்சகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story