மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

By 
job

2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில், ரெய்னா இடம் பெற்றிருந்தார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள ரெய்னா, ஐ.பி.எல்.ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 

அதிக அரைசதம் :

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.

இந்நிலையில், நடப்பாண்டிற்கான மாலத்தீவுகள் ஸ்போர்ட்ஸ் அவார்ட்ஸ் பிரிவின் கீழ், ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது அந்நாட்டு அரசால் சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கப்பட்டது.

16 வீரர்கள் :

பிரேசில் கால்பந்து வீரர் ராபர்டோ கார்லோஸ், ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் அசஃபா பவல், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா உட்பட 16 சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் ரெய்னா இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். 

கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் அல்-காதி பத்ர் அப்துல் ரஹ்மான், மாலத்தீவு டென்னிஸ் சங்கத்தின் கெளரவத் தலைவர் அகமது நசீர், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொஹமட்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
*

Share this story