பொங்கல் பரிசு ரூ.1000 : நாளை முதல் வினியோகம்..

gift4

டோக்கன் இல்லாதவர்கள் 13-ந்தேதி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்கும் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் ஏற்கனவே பச்சரிசி, சர்க்கரை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று முழுக்கரும்பு மற்றும் பணம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்கப்படுவதையொட்டி, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு கோட்டைக்கு செல்லும் வழியில் போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ரேசன் கடைக்கு சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அந்த கடையில் உள்ள பொதுமக்கள் 20 பேருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 பணத்துடன் ஒரு முழு கரும்பு ஆகியவற்றையும் தனது கையால் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் காலை 10 மணி முதல் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

Share this story