அக்னிபாத் திட்டத்தின் கீழ், வீரர்களுக்கு முன்னுரிமை : உள்துறை அமைச்சகம் தகவல்

amitshah

அக்னிபாத் வீரர்களுக்கு துணை ராணுவம், அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேருவோருக்கு மத்திய ஆயுதப் படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு பணியை முடித்து வெளியே வரும் வீரர்களுக்கு வயது வரம்பிலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்னிபாத் வீரர்கள் 2 படைப்பிரிவுகளிலும் சேருவதற்கு 3 வயது வரை விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அக்னிபாத்தின் முதல் பேட்ஜ் வீரர்கள் 2 படைப்பிரிவுகளிலும் சேருவதற்கு வயது வரம்பில் 5 வயது வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
*

Share this story