இதற்கு, சிபிஐ விசாரணை தான் சரியாக இருக்கும்.!  - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..

By 
asse11

தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்றும் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். அப்போது கேள்விநேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்துக்குப் பின்னர் விவாதிக்கலாம் எனதெரிவிக்க, அதிமுக எம்எல்ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:

கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை. ஆகையால் வெளிநடப்பு செய்தோம். மது அருந்தியவர்கள், இறந்தவர்கள், சிகிச்சை பெறுபவர்கள் நிலை என்ன என்பது குறித்து அறிய பேச அனுமதி கேட்டோம் இன்றும் அனுமதி தரவில்லை. 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் இறந்துள்ளதாக செய்தி வருகிறது. அரசு மெத்தன போக்கு கடைப்பிடிக்கிறது. 

விஷ சாராய முறிக்கும் ஹோமிபிசோல் மருந்தை நான் குறிப்பிட்டேன். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் ஃபோமிப்ரசோல் மருந்து பற்றி தெரிவித்துள்ளார். மருந்து பெயரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றிக் கூறிவிட்டு இருப்பு உள்ளதாக கூறுகிறார். கள்ளச்சாரயம் குடித்ததால் உயிரிழப்பு என்கிறார்கள் அதற்கு அரசு தான் காரணம். 

கள்ளச்சாரயத்தால் இறந்தவர்கள் அனைவரையும் வெவ்வேறு காரணங்களால் இறந்ததாக கூறினார்கள். கள்ளச்சாரயம் காரணம் இல்லை மாவட்ட ஆட்சியர் கூறினார். இதன் காரணமாக கள்ளச்சாரய மரணம் அதிகரித்தது. மாவட்ட ஆட்சியர் கூறிய தவறான தகவல் தான் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கூட்டணி கட்சியினர் கள்ளச்சாராயம் விவகாரம் முதல்வர்களுக்கு தெரியாது என கூறுவது ஏற்க முடியாது.

விஷ சாராய விவகாரத்தில் ஆட்சியரே தவறான தகவல் தந்துள்ளதால் ஆணைய விசாரணை சரியாக இருக்காது. மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை கோருகிறோம். நீதியை நிலை நாட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது என தெரிவித்துள்ளார்.

Share this story